சதவிகிதம், தொகை, அடிப்படை எண் ஆகியவற்றை கண்டறியவும். 150, எந்த அடிப்படை எண்ணின் 25%? இது 25% பெருக்கல் ஒரு எண், எனவே 25% ஐ மஞ்சள் நிறத்தில் எழுதுகிறேன். 25% பெருக்கல் ஒரு எண் என்பது 150 ஆகும். சதவிகிதத்தை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். இது 25% . இது தான் இதன் சதவிகிதம். சதவிகிதத்தை அடிப்படை எண்ணுடன் பெருக்குகிறோம். அடிப்படை எண்ணின் சதவிகிதம் என்பது தொகை ஆகும். இதை நீங்கள் மனக்கணக்கிடலாம். ஒரு எண்ணின் 25% = 150 ஆகும். 25% ஐ 0.25 என்றும் எழுதலாம். இரண்டும் ஒன்று தான். 0.25ஐ எந்த எண்ணுடன் பெருக்கினால் 150 கிடைக்கும். அந்த எண் 150 ஐ விட பெரியதா இல்லை சிறியதா? அந்த எண்ணில் 25% தான் எடுத்துக்கொள்கிறோம், 25/100 தான் எடுக்கிறோம். ஒரு முழு எண்ணில் 1/4 தான் எடுக்கிறோம். எனவே அந்த எண் 150 ஐ விட பெரியது. அந்த எண், 150 ஐ விட நான்கு மடங்கு பெரியதாக இருக்க வேண்டும். இப்பொழுது அந்த எண்ணை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு ஒரே எண்ணால் இடது பக்கத்தையும் வலது பக்கத்தையும் பெருக்கினால் சமமான விடையை வரும். எனவே, நம்மிடம் ஒரு எண் இருக்கிறது அதை 4 ஆல் பெருக்குகிறோம். அப்பொழுதுதான் அது 4 பெருக்கல் 150 ஆகும். 4 x 0.25 (4 x 25% அல்லது 1/4 ), இதன் விடை 1 தான். 150 ஐ 4 ஆல் பெருக்கினால் நமது விடை கிடைக்கும். அதன் விடை, 600. 150 என்பது 600-ல் 25% 600-ல் 1/4 பகுதி, 150 ஆகும்.