WEBVTT 00:00:00.000 --> 00:00:04.054 நான் இந்த காணொளியில், பின்னங்களை 00:00:04.054 --> 00:00:08.469 சிறியதிலிருந்து பெரியது வரை வரிசை படுத்த போகிறேன். 00:00:08.469 --> 00:00:14.002 முதலில், இவற்றிற்கு பொது பகுதியை கண்டறிய வேண்டும். 00:00:14.002 --> 00:00:21.432 அப்பொழுது தான் இதை ஒப்பிட முடியும்: 4/9, 3/4, 4/5, 11/12, 13/15. 00:00:21.432 --> 00:00:25.844 இவைகளுக்கு பொதுவான பகுதி இருந்தால் 00:00:25.844 --> 00:00:30.787 இதை எளிதில் ஒப்பிட்டு பார்க்க முடியும். 00:00:30.787 --> 00:00:36.432 இதற்கு பல வழிகள் உள்ளன. இதில் ஏதேனும் ஒரு எண்ணின் 00:00:36.432 --> 00:00:42.051 பெருக்குகளை எடுத்து அனைத்தயும் வகுக்கும் பெருக்கை கண்டறிய வேண்டும். 00:00:42.051 --> 00:00:45.667 இல்லையெனில், இவற்றிற்கு பகாக் காரணிகளை கண்டறிய வேண்டும். 00:00:45.667 --> 00:00:53.517 அதன் பின்பு, அதன் பகா எண்கள் அனைத்தையும் கொண்ட மீ.பொ.ம வை கண்டறிய வேண்டும். 00:00:53.517 --> 00:00:58.630 நாம் இரண்டாவது வழியில் முயற்சி செய்வோம். 00:00:58.630 --> 00:01:08.429 9 என்பது 3x3. எனவே, நமது மீ.பொ.ம -வில் 3x3 இருக்க வேண்டும். 00:01:08.429 --> 00:01:12.191 பிறகு, 4, 4 என்பது 2x2. 00:01:12.191 --> 00:01:17.810 நமது மீ.பொ.ம வில் 2x2 -ம் இருக்க வேண்டும். 00:01:17.810 --> 00:01:22.361 5 ஒரு பகா எண், இதை இங்கு எழுதலாம். 00:01:22.361 --> 00:01:31.185 பிறகு, 12 என்பது 2x6, 6 என்பது 2x3. 00:01:31.185 --> 00:01:40.867 எனவே நமது மீ.பொ.ம (LCM) -ல் இரண்டு 2 மற்றும் ஒரு 3 தேவை. 00:01:40.867 --> 00:01:48.182 வேறு வழியில் யோசித்தால், 9 மற்றும் 4 ஆல் வகுபடும் எண் 00:01:48.182 --> 00:01:50.200 12 ஆளும் வகுபட வேண்டும். 00:01:50.200 --> 00:01:58.770 இறுதியாக, 15-ன் பகா காரணிகளால் வகுபட வேண்டும். 00:01:58.770 --> 00:02:03.971 15 என்பது 3x5. 00:02:03.971 --> 00:02:09.312 நம்மிடம், ஏற்கனவே 3 மற்றும் 5 உள்ளது. 00:02:09.312 --> 00:02:15.163 எனவே, இது தான் நமது மீ.பொ.ம.(LCM) 00:02:15.163 --> 00:02:19.426 நமது மீ.பொ.ம. இதன் பெருக்குகள் ஆகும். 00:02:19.426 --> 00:02:31.416 3x3 = 9... 9x2 = 18... 18x2 = 36.. 36x5 என்பது, 00:02:31.416 --> 00:02:44.736 இதை எழுதிப்பார்க்கலாம். 36x5... 6x5=30.. 3x5=15... 15+3 = 18.. எனவே, 180. 00:02:44.736 --> 00:02:47.406 எனவே 3x3x2x2x5 = 180 ஆகும். 00:02:47.406 --> 00:02:52.873 இப்பொழுது அனைத்து பின்னங்களையும் 180-ன் பகுதிக்கு மாற்றலாம். 00:02:52.873 --> 00:02:58.947 முதலில், 4/9, 00:02:58.947 --> 00:03:04.065 9 ஐ 180 ஆக்க, 20 ஆல் பெருக்க வேண்டும். 00:03:04.065 --> 00:03:16.836 இதன் பகுதியை 180 ஆக்க, 20 ஆல் பெருக்க வேண்டும். 00:03:16.836 --> 00:03:21.851 இதன் மதிப்பு மாறாமல் இருக்க, இதன் தொகுதியையும் 20 ஆல் பெருக்க வேண்டும். 00:03:21.851 --> 00:03:28.863 4 x 20 = 80. எனவே, 4/9 என்பது 80/180 -க்கு சமம். 00:03:28.863 --> 00:03:35.750 இப்பொழுது 3/4. இதன் பகுதியை எப்படி 180 ஆக்குவது? 00:03:35.750 --> 00:03:42.656 180 ஐ 4 ஆல் வகுத்தால், வரும் எண் தான் அது. 00:03:42.656 --> 00:03:54.452 4x40 = 160.. 4x5=20.. 160+20=180 4 x 45 = 180. இதன் பகுதியையும் 45 ஆல் பெருக்க வேண்டும். 00:03:54.452 --> 00:04:09.200 3x45 என்பது 120+15= 135. எனவே, 3/4 என்பது 135/180 ஆகும். 00:04:09.200 --> 00:04:28.569 இப்பொழுது 4/5. 5 ஐ 180 ஆக்க 36 ஆல் பெருக்க வேண்டும். 00:04:28.569 --> 00:04:35.133 எனவே, இதன் தொகுதியையும் 36 ஆல் பெருக்க வேண்டும். 00:04:35.133 --> 00:04:46.325 ஆகையால், 144/180 00:04:46.325 --> 00:04:50.180 இன்னும் இரண்டு தான் உள்ளது. 00:04:50.180 --> 00:05:15.006 180/12 = 15. எனவே, இதை 15 ஆல் பெருக்க வேண்டும். 00:05:15.006 --> 00:05:25.226 10x15=150.. 150+15 = 165. எனவே, 11/12 = 165/180 ஆகும். 00:05:25.226 --> 00:05:28.067 கடைசியாக, நம்மிடம் 13/15 இருக்கிறது 00:05:28.067 --> 00:05:42.644 15 ஐ 180 ஆக்க, 12 ஆல் பெருக்க வேண்டும். 15x10 = 150 ஆகும். மீதம் 30 தேவை. எனவே, 15x12 = 180. 00:05:42.644 --> 00:05:48.088 இதன் தொகுதி 13 ஐயும் 12 ஆல் பெருக்க வேண்டும். 00:05:48.088 --> 00:06:01.233 12x12=144 என்று நமக்கு தெரியும், அதனுடன் ஒரு 12 ஐ கூட்டினால், 156 கிடைக்கும். 00:06:01.233 --> 00:06:08.431 நாம் அனைத்து எண்களையும் ஒரே பகுதிக்கு மாற்றி எழுதி விட்டோம். 00:06:08.431 --> 00:06:12.919 இப்பொழுது இதை ஒப்பிட்டு பார்க்கலாம். 00:06:12.919 --> 00:06:24.114 80 மிக சிறிய எண். எனவே 4/9 மிக சிறிய பின்னம். 00:06:24.114 --> 00:06:30.684 4/9 என்பதும் 80/180 -ம் சமம் தான் 00:06:30.684 --> 00:06:53.218 அடுத்த சிறிய எண் 135, 135/180, அதாவது 3/4. 00:06:53.218 --> 00:07:05.254 அதன் பிறகு 144/180, அதாவது 4/5. 00:07:05.254 --> 00:07:20.831 அடுத்தது 156/180, அதாவது 13/15. 00:07:20.831 --> 00:07:35.970 இறுதியாக, 165/180, அதாவது 11/12. 00:07:35.970 --> 00:07:48.033 அவ்வளவுதான். பின்னங்களை வரிசை படுத்தி விட்டோம்.