0:00:01.610,0:00:05.362 பின்னங்களின் கூட்டல் மற்றும் கழித்தலை பற்றி காண்போம்.. 0:00:05.362,0:00:08.225 இப்பொழுது தொடங்கலாம். 0:00:08.225,0:00:12.110 நான் உங்களைய குழப்பமடைய செய்யக் கூடாது என்று நினைக்கிறன். 0:00:12.110,0:00:15.120 இது உங்களுக்கு எளிதாக புரியும். 0:00:15.130,0:00:23.940 1/4 + 1/4 = ? 0:00:23.940,0:00:25.260 அப்படியென்றால் என்ன என்று சற்று சிந்திக்கலாம். 0:00:25.260,0:00:32.358 கேக் ஒன்றை எடுத்துக் கொண்டு அதை நான்கு துண்டுகளாக வெட்டலாம்.. 0:00:32.358,0:00:35.170 இதில் உள்ள முதல் பாகம் 1/4 ஆகும். 0:00:35.170,0:00:37.710 இதை வேறு நிறத்தில் வரைகிறேன். 0:00:37.720,0:00:39.128 இது 1/4 ஆகும். 0:00:39.128,0:00:42.652 இது ஒரு 1/4, பிறகு 0:00:42.652,0:00:45.560 அதனுடன் மற்றொரு 1/4 ஐ கூட்டலாம். 0:00:45.570,0:00:51.600 இதை இளஞ்சிவப்பு நிறத்தில் வரைகிறேன். 0:00:51.600,0:00:57.060 இந்த 1/4, இந்த இளஞ்சிவப்பு 1/4, இந்த கேக்-ன் பகுதி. 0:00:57.070,0:01:00.270 இப்பொழுது நான் இரண்டு 1/4 பகுதிகளை சாப்பிட்டு விட்டேன்.. 0:01:00.271,0:01:03.247 அல்லது, நான் முதலில் ஒரு 1/4, பிறகு ஒரு 1/4 சாப்பிடுகிறேன். 0:01:03.247,0:01:04.560 நான் மொத்தம் எவ்வளவு சாப்பிட்டேன்? 0:01:04.560,0:01:06.922 நீங்கள், இந்த படத்தை பார்த்தே கூறலாம். 0:01:06.937,0:01:10.249 நான் இந்த கேக்கில் இரண்டு பகுதியை சாப்பிட்டு விட்டேன்.. 0:01:10.249,0:01:15.218 ஆக ஒரு 1/4 பகுதி மற்றும் 0:01:15.218,0:01:17.140 மற்றொரு 1/4 பகுதியை சாப்பிட்டு விட்டேன்.. 0:01:17.140,0:01:21.643 மொத்தம் 2/4 பகுதியை சாப்பிட்டு விட்டேன் 0:01:21.658,0:01:23.699 எனவே, சம பின்னங்களின் பாடத்தின் படி, 0:01:23.699,0:01:27.470 நான் கேக்கில் ஒரு பாதியை சாப்பிட்டு விட்டேன். 0:01:27.480,0:01:28.320 அது தான் சரி. 0:01:28.320,0:01:32.140 நான் 4-ல் 2 பகுதியை சாப்பிட்டேன், அதாவது ஒரு பாதி. 0:01:32.150,0:01:34.952 இதை கணிதப்பூர்வமாக எப்படிக் கூறுவது? 0:01:34.952,0:01:38.282 பின்னத்தின் பகுதி எண்கள், 0:01:38.297,0:01:41.270 பகுதி எண்கள் மாறாது. 0:01:41.285,0:01:44.335 ஏனெனில், அவை முதலில் மொத்தமாக இருந்த பகுதிகள். 0:01:44.350,0:01:47.428 பிறகு, நான் அதன் தொகுதிகளை கூட்டி விட்டேன். 0:01:47.428,0:01:52.634 முதலில் ஒரு 1/4, பிறகு ஒரு 1/4 சாப்பிட்டேன், 0:01:52.634,0:01:56.202 எனவே, நான் 2/4 சாப்பிட்டேன், அதாவது ஒரு பாதி. 0:01:56.202,0:02:01.845 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம். 0:02:01.845,0:02:09.256 2/5 + 1/5 = ? 0:02:09.256,0:02:11.750 அதே போல தான் இதுவும். 0:02:11.750,0:02:14.210 முதலில் பகுதி எண்கள் சமமாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். 0:02:14.220,0:02:16.935 பகுதி எண்களின் வித்யாசமாக இருந்தால் என்ன செய்ய வேண்டுமென்று பிறகு கூறுகிறேன். 0:02:16.935,0:02:21.053 பகுதி எண்கள் சமமாக இருந்தால் விடையில் அதே எண்ணை பகுதியாக போட வேண்டும். 0:02:21.053,0:02:22.470 பிறகு தொகுதி எண்களை கூட்ட வேண்டும். 0:02:22.470,0:02:31.078 2/5 + 1/5 = 3/5 0:02:31.090,0:02:33.370 கழித்தலிலும் இதே போல தான் வரும். 0:02:33.380,0:02:42.420 3/7 - 2/7 = 1/7. 0:02:42.430,0:02:46.351 3 - 2 = 1 ஆகும். 0:02:46.367,0:02:48.082 பகுதி எண்களை மாற்றாமல் வைத்துக் கொண்டேன். 0:02:48.082,0:02:48.920 இது தான் சரியானது. 0:02:48.920,0:02:52.476 என்னிடம் 7-ல் மூன்று பங்கு கேக் உள்ளது. 0:02:52.476,0:02:55.595 பிறகு அதில் 2 பங்கை குடுத்து விட வேண்டும். 0:02:55.595,0:03:00.175 இறுதியாக என்னிடம் 7-ல் ஒரு பங்கு கேக் மீதம் இருக்கும். 0:03:00.180,0:03:02.745 இது சற்று சுலபமானது தான். 0:03:02.745,0:03:04.564 பகுதி எண்கள் சமமாக இருந்தால், 0:03:04.564,0:03:06.860 பகுதி எண் என்பது பின்னத்தின் கீழே இருக்கும். 0:03:06.870,0:03:08.400 தொகுதி எண் என்பது பின்னத்தின் மேலே இருக்கும். 0:03:08.400,0:03:11.420 வெவ்வேறு பகுதி எண்கள் இருந்தால் என்ன செய்வது? 0:03:11.430,0:03:15.090 இதுவும் எளிதான ஒன்று தான். 0:03:15.090,0:03:24.320 1/4 + 1/2 = ? 0:03:24.330,0:03:27.180 இப்பொழுது அதே எடுத்துக்காட்டை பார்க்கலாம். 0:03:27.180,0:03:33.732 ஒரு கேக் வரைகிறேன். 0:03:33.732,0:03:37.244 இங்கு 1/4 உள்ளது. 0:03:37.250,0:03:40.460 இது தான் அந்த கேக்-ன் 1/4. 0:03:40.460,0:03:44.540 மேலும் இதில் பாதி கேக்கை சாப்பிட போகிறேன் 0:03:44.550,0:03:46.450 எனவே, நான் பாதி கேக்கை சாப்பிட்டு விட்டேன். 0:03:46.460,0:03:49.090 இது ஒரு பாதி. 0:03:49.090,0:03:54.590 இந்த பாதி கேக் முழுவதையும் சாப்பிட்டு விட்டேன். 0:03:54.605,0:03:55.280 இதை கூட்டினால் என்ன கிடைக்கும்? 0:03:55.280,0:03:57.180 இதை இரு வழிகளில் செய்யலாம். 0:03:57.180,0:03:59.200 முதலில், இந்த ஒரு பாதியை மாற்றி எழுத வேண்டும். 0:03:59.210,0:04:07.115 1/2 என்பது 2/4 ஆகும். 0:04:07.115,0:04:12.126 1/4 + 1/4 = 2/4 ஆகும். 0:04:12.126,0:04:14.802 ஒரு பாதி என்பதும், 2/4 என்பதும் ஒன்று தான். 0:04:14.802,0:04:17.667 சம பின்னம் பாடத்தில் நாம் ஏற்கனவே பார்த்தது போல 0:04:17.667,0:04:20.317 1/4 கூட்டல் ஒரு பாதி, என்பதும், 0:04:20.317,0:04:27.168 1/4 கூட்டல் 2/4 என்பதும் ஒன்று தான். 0:04:27.183,0:04:35.591 இங்கு 1/2 ஐ 2/4 ஆக மாற்றி உள்ளேன். 0:04:35.591,0:04:40.199 அதாவது 1/2 ஐ 2-ஆல் பெருக்கி உள்ளேன். 0:04:40.199,0:04:41.730 இதை எந்த பின்னத்திற்கும் செய்யலாம். 0:04:41.740,0:04:45.620 பகுதி மற்றும் தொகுதி எண்களை ஒரே எண்ணால் பெருக்க வேண்டும்.. 0:04:45.620,0:04:47.860 எந்த எண்ணால் வேண்டுமானாலும் பெருக்கலாம். 0:04:47.860,0:04:53.553 ஏனென்றால் 1/2 x 1 = 1/2 ஆகும். 0:04:53.553,0:04:54.722 இது உங்களுக்கு தெரிந்திருக்கும். 0:04:54.722,0:05:00.060 இதை 1/ 2 x 2/2 என்று மாற்றி எழுதலாம். 0:05:00.070,0:05:04.480 எனவே 1/2 x 2/2 = 2/4 ஆகும். 0:05:04.490,0:05:11.478 ஏனெனில், சமமான பகுதி எண் வேண்டும். 0:05:11.478,0:05:13.497 நான் உங்களை குழப்பமடைய செய்ய வில்லை. 0:05:13.520,0:05:15.210 இதை முடித்து விடலாம். 0:05:15.220,0:05:18.189 நம்மிடம் 1/4 + 2/4 உள்ளது 0:05:18.205,0:05:21.160 நாம் இதன் தொகுதியை பெருக்க வேண்டும். 0:05:21.160,0:05:22.747 இதன் பகுதி எண் மாறாது, எனவே இது 3/4. 0:05:22.762,0:05:25.180 இந்த படத்தை பாருங்கள். 0:05:25.180,0:05:29.360 இந்த கேக்கில் 3 பகுதிகளை நாம் சாப்பிட்டு விட்டோம். 0:05:29.370,0:05:34.131 அடுத்த கணக்கை பார்க்கலாம். 0:05:34.172,0:05:44.884 1/2 + 1/3 = ? 0:05:44.884,0:05:48.151 இதில் பகுதி எண்கள் சமமாக இல்லை.. 0:05:48.151,0:05:51.360 இதில் ஒன்றை பெருக்கினால் மட்டும் போதாது. 0:05:51.370,0:05:53.850 2 உடன் எதை பெருக்கினாலும் 3 வராது. 0:05:53.850,0:05:56.500 அல்லது, 3 உடன் எதை பெருக்கினாலும் 2 வராது. 0:05:56.500,0:05:58.880 2 உடன் எதை பெருக்கினாலும் 3 வராது. 0:05:58.890,0:06:01.860 எனவே, இரண்டு எண்களுக்கும் பொதுவான எண்ணைக் கொண்டு பெருக்க வேண்டும். 0:06:01.870,0:06:04.815 இது தான் நமக்கு தேவை. 0:06:04.815,0:06:07.065 இதை பொது பகுதி என்று கூறுவோம். 0:06:07.065,0:06:11.120 இரண்டு எண்களுக்கும் மீ.பொ.ம (L.C.M) கண்டுபிடிக்க வேண்டும் . 0:06:11.120,0:06:13.380 2 , 3 -ன் மீ.பொ.ம (L.C.M) என்ன? 0:06:13.390,0:06:17.863 இரண்டு மற்றும் மூன்றின் பொதுவான சிறிய பெருக்கை கண்டறிய வேண்டும். 0:06:17.863,0:06:23.488 2 , 3 -ன் மீ.பொ.ம (L.C.M) = 6 ஆகும். 0:06:23.488,0:06:27.880 இப்பொழுது இந்த இரண்டு பகுதி எண்களையும் 0:06:27.880,0:06:30.320 6 ஆக மாற்ற வேண்டும்.. 0:06:30.330,0:06:33.310 இதை நாம் சம பின்னம் பாடத்தில் பார்த்திருக்கிறோம். 0:06:33.310,0:06:40.259 இதில், ஒரு பாதி என்பது = 3/6 ஆகும். 0:06:40.260,0:06:40.810 இது சரியானது. 0:06:40.810,0:06:43.930 இரண்டில் பாதி ஒன்று. ஆறில் பாதி மூன்று. 0:06:43.940,0:06:47.630 அதேபோல, ஆறு பகுதி இருக்கும் கேக்-ல் 0:06:47.640,0:06:50.720 மூன்றில் ஒன்று என்பது, ஆறில் இரண்டாகும். 0:06:50.730,0:06:57.690 1/3 = 2/6 என்பதும் 3/6 + 2/6 என்பதும் ஒன்று தான். 0:06:57.690,0:06:58.970 நான் வித்யாசமாக ஏதும் செய்ய வில்லை 0:06:58.980,0:07:03.205 இந்த இரண்டு பின்னங்களையும் பகுதி எண் சமமாக வருவது போல மாற்றி எழுதி உள்ளேன். 0:07:03.220,0:07:06.040 இதன் பகுதிகளை மாற்றியுள்ளேன். 0:07:06.050,0:07:08.820 இது நமக்கு உதவியாக இருக்கும். 0:07:08.820,0:07:11.215 இப்பொழுது இதை கூட்டுவது எளிது. 0:07:11.215,0:07:14.245 இதன் தொகுதிகளை கூட்ட வேண்டும். 3 + 2 = 5 0:07:14.261,0:07:16.800 பகுதி எண்களில் மாற்றம் இல்லை. 0:07:16.815,0:07:22.647 3/6 + 2/6 = 5/6 0:07:22.647,0:07:24.768 இதே முறை தான் கழித்தலிலும் வரும். 0:07:24.768,0:07:35.142 1/2 - 1/3 என்பது 3/6 - 2/6 ஆகும் 0:07:35.142,0:07:39.520 3/6 - 2/6 = 1/6 0:07:39.520,0:07:43.988 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம். 0:07:43.990,0:07:47.202 நான் வேகமாக செல்வது புரியவில்லை எனில் 0:07:47.202,0:07:49.198 மீண்டும் ஒரு முறை 0:07:49.198,0:07:52.465 காணொளியை பார்த்துக்கொள்ளுங்கள். 0:07:52.465,0:07:55.100 இப்போது சற்று கடினமான கணக்கு. 0:07:55.100,0:07:59.320 1/10 - 1 = ? 0:07:59.320,0:08:01.620 1 என்பது பின்னம் அல்ல. 0:08:01.620,0:08:04.130 ஆனால் அதை பின்னமாக மாற்றி எழுத வேண்டும்.. 0:08:04.140,0:08:07.734 1 = 10/10 ஆகும். 0:08:07.734,0:08:11.296 இப்படி எழுதினால் தான் 10 -ன் பகுதிக்கு வரும். 0:08:11.296,0:08:11.796 சரி தானே? 0:08:11.796,0:08:14.820 ஒன்று என்பது 10 கீழ் 10 ஆகும். 0:08:14.820,0:08:16.320 10/10 = 1. 0:08:16.320,0:08:20.880 எனவே 1/10 - 10/10 = ? 0:08:20.890,0:08:24.494 நாம் தொகுதி எண்களை மட்டும் கழிக்க வேண்டும் 0:08:24.494,0:08:31.160 பகுதியில் 10 -ல் எந்த மாற்றமும் இல்லை. 0:08:31.170,0:08:34.370 1/10 - 10/10 = -9/10 0:08:34.370,0:08:36.546 அடுத்த கணக்கை பார்க்கலாம் 0:08:36.546,0:08:38.670 இதற்கு மட்டும் தான் நேரம் இருக்கிறது. 0:08:38.670,0:08:47.310 -1/9 - 1/4 = ? 0:08:47.320,0:08:53.760 L.C.M ( 9 , 4) = 36 0:08:53.760,0:08:55.580 அதாவது 36 ஆகும். 0:08:55.590,0:09:01.978 -1/9 என்ற பின்னத்தின் பகுதியை 36 என்று எப்படி மாற்றுவது? 0:09:02.000,0:09:05.010 9 x 4 = 36 ஆகும். 0:09:05.020,0:09:07.220 தொகுதி எண்ணையும் 4-ஆல் பெருக்க வேண்டும்.. 0:09:07.230,0:09:11.850 -1 x 4 = -4 ஆகும். 0:09:11.860,0:09:16.860 -4 கீழ் 36 ஆகும். 0:09:16.860,0:09:20.110 1/4 என்ற பின்னத்தை 36 ஆக மாற்ற, 9-ஆல் பெருக்க வேண்டும்.. 0:09:20.110,0:09:23.070 பகுதி எண்ணை 9-ஆல் பெருக்கினால், 0:09:23.070,0:09:25.190 தொகுதி எண்ணையும் 9-ஆல் பெருக்க வேண்டும். 0:09:25.190,0:09:28.360 1 x 9 = 9. 0:09:28.370,0:09:35.195 இது -4/36 - 9/36 ஆகும். 0:09:35.195,0:09:39.898 அதாவது -13/36. 0:09:39.898,0:09:41.631 எனக்கு நேரம் அவ்வளவு தான் உள்ளது. 0:09:41.631,0:09:43.731 இன்னும் சில பாடங்களை பிறகு கூறுகிறேன். 0:09:43.731,0:09:45.790 இப்பொழுது நீங்கள் இதே போல கூட்டல் கழித்தல் 0:09:45.790,0:09:48.652 கணக்குகளை செய்ய தயாராகியிருப்பீர்கள் என்று நினைக்கிறன்.