12.98 என்பதை கலப்பு எண்ணாக எழுத முடிகிறதா என்று பார்க்கலாம்.
எனவே, முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
இதுவும் 12+0.98 என்பதும் ஒன்று தான்.
ஏன் இவ்வாறு செய்கிறோம் என்றால், நாம் 12 மற்றும்
ஒரு பின்னம் என்று எழுதவேண்டும், 0.98 என்பதை பின்னத்தில்
எழுதிவிட்டால், நாம் முடித்துவிட்டோம்.
இதனை செய்ய முடிகிறதா என்று பார்க்கலாம்.
இங்கு உள்ள இந்த 9, பத்தின் இடத்தில் உள்ளது.
இது பத்தின் இடம், இது நூறின் இடம்.
எனவே, இந்த 0.98 என்பதை இரு வழிகளில் பார்க்கலாம்.
இதனை 9/10 எனலாம்.
இது 9/10 + 8/100 + 8/100
இதனை பொதுவான பகுதிக்கு மாற்றினால், இது 90/100
+ 8/100 ஆகும். அப்படியென்றால் இது 98/100.
எனவே, 0.98 என்பது 98/100 ஆகும்
இது 98/100 ஆகும்.
நாம் இதனை கலப்பு எண்களாக எழுத வேண்டும் என்றால்,
இது 12 மற்றும் 98/100.
நாம் இதனை சிறிய எண்ணாக சுருக்க வேண்டும்.
98 வகுத்தல் 2, அதேபோல 100-ம் வகுபடம்
இவை இரண்டிற்கும் பொதுவான காரணி இரண்டு.
எனவே, இது 12 மற்றும் 98 வகுத்தல் 2.. அதாவது 49.
100 வகுத்தல் 2 என்பது 50. இவ்வளவுதான் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.
49-ன் காரணி, எழால் வகுபடும்.. ஆனால் 50 வகுபடாது.
நாம் இதனை சிறிய அளவிற்கு மாற்றிவிட்டோம். ஆக, 12.98 என்பதை
கலப்பு எண்ணாக மாற்றி 12 49/50 என்றாக்கி விட்டோம்.