கொடுக்கப்பட்டுள்ள ஓரினப் பின்னங்களை கழித்து எளிதாக்க வேண்டும் 8/ 18 - 5 / 18 ஓரினப் பின்னங்களை கூட்டுதல் போலவே கழித்தலும் மிக எளிது. கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பின்னங்களின் பகுதியும் சமமாக இருப்பதால் தொகுதி எண்களை கழித்தப் பின்னத்தின் புது தொகுதி எண் ஆக எழுதவேண்டும் பகுதி எண் அந்த எண்ணாகவே அமையும் இந்த கழிதலில்பகுதி எண் சமமாக இருப்பதால் தொகுதி எண்களை கழிக்கவேண்டும் 8 - 5 =3 8/ 18 - 5 / 1 8 = 3 / 18 3 /1 8 இதனை இன்னும் எளிதாக்க வேண்டும் . அதற்கு , அந்த பின்னத்தின் மீப்பெரு பொது வகுத்தி கண்டுபுடிக்க வேண்டும் 3 தான் இதன் மீப்பெரு பொது வகுத்தி 3 ஆல் பின்னத்தின் பகுதியையும் தொகுதியையும் வகுத்தல் நமக்கு எளிய விடை கிடைக்கும் 3/18 = 1/6 இதனை வரைபடத்தில் கண்டால் இன்னும் எளிதாக புரியும் ஒரு சதுரத்தை 18 பாகங்களாக பிரிதுகொள்வோம் மொத்தம் 18 பாகங்கள் உள்ளது முதலில் 8/18 அதாவது 8 பாகங்களை எடுத்துகொள்வோம் இதில் 5 பாகங்கள் கழிக்கவேண்டும் மீதம் 3 பாகங்கள் உள்ளது நமக்கு கிடைத்துள்ள எளிய விடை 1 / 6 ஆகும்.