ரெஜினா வீட்டில் இருந்து பள்ளிக்கு வண்டியில் 2 1/4 மைல் தூரம் செல்கிறாள். அதன் பிறகு சினேகிதியின் வீட்டிற்கு 1 5/8 மைல் தூரம் செல்கிறாள். அவள் சென்ற மொத்த தூரம் எவ்வளவு? முதலில் 2 1/4 மைல் தூரம் செல்கிறாள். பிறகு 1 5/8 செல்கிறாள் 1 5/8 மைல் தூரம் செல்கிறாள். இதன் மொத்த தூரம் அவள் பயணம் செய்த தூரம். மொத்த தூரத்தைக் கண்டுபிடிக்க முதலில் முழு எண்களைக் கூட்டு வேண்டும். 2+1/4+1+5/8 இப்பொழுது 2 ஐயும் 1 ஐயும் கூட்ட வேண்டும். அதை இங்கு எழுதுகிறேன். 2+1=3. பிறகு இதைக் கூட்ட வேண்டும். 1/4+5/8. பிறகு இந்த பின்னங்களைக் கூட்ட வேண்டும். அதற்கு 4 மற்றும் 8 -ன் மீச்சிறு பொது மடங்கை கண்டுபிடிக்க வேண்டும். அது தான் நமது புது பகுதி ஆகும். 8, 8 மட்டும் 4, இரண்டிலும் வகுபடக்கூடியது. எனவே, இது 4,8 இரண்டிற்கும் மீ.பொ.ம. எனவே நமது பகுதி 8. 5/8 என்பது 5/8 ஆகவே தான் இருக்கும். 4 ஐ 8 ஆக மாற்ற வேண்டுமென்றால், பகுதியையும் தொகுதியையும் இரண்டால் பெருக்க வேண்டும். 1 x 2 = 2. நம்மிடம் இங்கு 3 உள்ளது. எனவே 2 1/4 + 1 5/8 என்பதும் 3+2/8+5/8 ம் சமம் ஆகும். பிறகு 2/8 + 5/8 கூட்ட வேண்டும். நம்மிடம் 7/8 உள்ளது. எனவே இது 3 7/8 மைலுக்கு சமம். அவள் பயணம் செய்த மொத்த தூரம் 3 7/8 மைல்கள். இங்கு ஒன்றை தெளிவாக்குகிறேன். இதுவரை கலப்பு எண்களைக் கூட்டும்பொழுது பின்னம் தகுபின்னமாகவே வந்துள்ளது. அதாவது தொகுதி பகுதியைவிட சிறியதாக இருக்கும். பகுதியைவிட தொகுதி சிறியதாக இருந்தால் என்ன செய்யவேண்டும் என்பதற்கு சிறிய உதாரணம் ஒன்று கொடுக்கிறேன். நம்மிடம் 1 5/8+2 4/8 உள்ளது. இப்பொழுது முழு எண்களை மட்டும் கூட்டுவோம். 1+2=3 5/8+4/8=9/8 இப்பொழுது நமக்கு 3+9/8 கிடைக்கும். இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம். ஏனெனில், இதுவும் 3 9/8 ம் ஒன்றே. அதில் முழு எண்ணும் தகாப்பின்னமும் கலந்து உள்ளது. இதை கலப்பு எண்ணாக மாற்ற கடினமாக இருந்தால், பின்னம் தகுபின்னமாக இருப்பதே சிறந்தது. எனவே, இப்பொழுது 9/8 ஐ எழுதலாம், 9/8 என்பதும் 9 1/8 என்பதும் ஒன்று தான். 9 ஐ 8 ஆல் வகுக்கும் பொழுது 1 கிடைக்கிறது. எனவே இது 1 1/8 ஆகும். எனவே, இது 3 + 1 1/8. இதில் முழு எண்களை முதலில் கூட்டுவோம். 3+1=4. பிறகு 1/8 உள்ளது. இங்கு 4 மற்றும் 1/8 உள்ளது. சில சமயங்களில், பின்னம் தகாபின்னமாக முடியலாம்.