- 1.03075 ஐ 0.25 ஆல் நாம் வகுக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, உங்களுடைய வகு எண், அதாவது மற்றொரு எண்ணை நீங்கள் வகுக்கும் எண், ஒரு தசம எண், எனவே அதை முழு எண்ணாக மாற்றுவதற்கு போதுமான அளவு 10 -ன் அடுக்குகளால் பெருக்க வேண்டும், அதனால் நீங்கள் தசமப் புள்ளியை வலது பக்கம் நகர்த்த முடியும். ஏதேனும் ஒரு எண்ணை ஒவ்வொரு முறை நீங்கள் 10 ஆல் பெருக்கும்போது, உங்களுடைய தசமப் புள்ளி ஒரு இடம் வலதுபக்கம் நகர்கின்றது. இங்கு, நாம் அதை வலதுபக்கம் ஒரு முறை மற்றும் இரண்டு முறை நகர்த்துகிறோம். எனவே 0.25 முறை 10 -ன் அடுக்கு 2 என்பது 0.25 முறை 100 என்பதற்குச் சமமாகும், மேலும் 0.25 என்பது 25 ஆகிறது. இப்பொழுது, ஒரு வகு எண்ணுக்கு நீங்கள் அதை செய்தால், நீங்கள் வகுக்கக்கூடிய வகுபடும் எண்ணுக்கும் அதை நீங்கள் செய்ய வேண்டும். நாம் 10-ன் அடுக்கு இரண்டால் இதைப் பெருக்க வேண்டும், அல்லது மற்றொரு வழி என்னவென்றால், தசமப்புள்ளியை இரண்டு இடங்கள் வலதுபக்கம் நகர்த்துவது ஆகும். எனவே அதை ஒரு இடம், இரண்டு இடம் நகர்த்துங்கள். அதை இங்கே வைக்க வேண்டும். இது ஏன் சரியானதாக இருக்கிறது எனப் பார்ப்பதற்கு, இந்த வகுத்தல் கணக்கில் இருக்கும் இந்த வெளிப்பாடு, 1.03075 வகுத்தல் 0.25 என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நாம் 0.25-ஐ 10-ன் அடுக்கு 2 ஆல் பெருக்குகிறோம். குறிப்பாக அதை நாம் 100 ஆல் பெருக்குகிறோம். நான் இதை வேறு வண்ணத்தில் செய்கிறேன். நாம் இதன் பகுதியை 100 ஆல் பெருக்குகிறோம். இது தான் வகு எண். நாம் அதை 100 ஆல் பெருக்குகிறோம், எனவே அதையே நாம் தொகுதிக்கும் செய்ய வேண்டும், இந்த வெளிப்பாடு மாறாமல் இருக்க வேண்டுமென்றால், நாம் அந்த எண்ணை மாற்றக் கூடாது. மேலும், அதை நாம் 100 ஆல் பெருக்க வேண்டும். மேலும் நீங்கள் அதைச் செய்யும்போது, இது 25 என ஆகின்றது, மேலும் இது 103.075 என ஆகின்றது. இப்பொழுது நான் இதை மீண்டும் எழுதுகிறேன். சில சமயங்களில், பயிற்சிப் புத்தகத்திலோ அல்லது வேறு எதிலாவதோ செய்யும்போது, தசமப்புள்ளி எங்கே இருக்கின்றது என்பது உங்களுக்கு நினைவில் இருக்கும்வரை, இதை நீங்கள் திரும்பவும் எழுத வேண்டியதில்லை. ஆனால் நான் அதை மீண்டும் எழுதப்போகிறேன், சற்று தெளிவாக இருக்கும் வகையில் எழுதுகிறேன். வகு எண் மற்றும் வகுபடும் எண் இரண்டையுமே நாம் 100 ஆல் பெருக்கி விட்டோம். இந்த கணக்கு 103.075 வகுத்தல் 25 என ஆகின்றது. இவை இரண்டும் ஒரே ஈவையே கொடுக்கின்றன. அந்த வழியில் நீங்கள் அதைப் பார்த்தால், இவை இரண்டும் ஒரே பின்னமாகும். தசமப் புள்ளியை வலது பக்கத்தில் இரண்டு இடங்கள் நகர்த்துவதற்கு, பகுதியையும் தொகுதியையும் நாம் 100 ஆல் பெருக்கியிருக்கிறோம். இப்பொழுது வகுப்பதற்குத் தயாராக இருக்கும் வகையில் நாம் செய்துள்ளோம். முதலாவதாக, இங்கு நம்மிடம் 25 உள்ளது, மேலும் பல இலக்கங்களைக் கொண்ட ஒரு எண்ணை வகுப்பதன் மூலம் நாம் வகுத்தலை எவ்வாறு சிறப்பாக செய்கிறோம் என்பதை அறியலாம். 1 ஐ 25 ஆல் வகுக்க முடியாது. 10 ஐ 25 ஆல் வகுக்க முடியாது. 103 ஐ 25 ஆல் வகுக்க முடியும். 4 முறை 25 என்பது 100 என நமக்குத் தெரியும், எனவே 25 ஆனது 100 -ல் நான்கு முறை செல்கின்றது. 4 முறை 5 என்பது 20 ஆகும். 4 முறை 2 என்பது 8 ஆகும், கூட்டல் 2 சமம் 100 ஆகும். நமக்கு அது தெரியும். நான்கு கால்பகுதி $1.00 ஆகும். அது 100 சென்ட் ஆகும். இப்பொழுது நாம் கழிக்கிறோம். 103 கழித்தல் 100 என்பது 3 ஆகும், மேலும் இப்பொழுது நாம் இந்த 0-வை கீழே இறக்குகிறோம். நாம் 0-வை அங்கே கீழே கொண்டுவருகிறோம். 30-ல் 25 ஒரு முறை செல்கின்றது. நாம் விரும்பினால், நாம் உடனடியாக தசமப்புள்ளியை இங்கே வைக்க முடியும். கணக்கு முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. தசமப்புள்ளி சரியாக அந்த இடத்தில் அமர்கின்றது, எனவே நாம் எப்பொழுதும் நம்முடைய ஈவில் அல்லது நம்முடைய விடையில் தசமப் புள்ளியை சரியான இடத்தில் வைக்க வேண்டும். - 30-ல் 25 ஒரு முறை செல்கின்றது எனப் பார்த்தோம். 1 முறை 25 என்பது 25 ஆகும், பின்பு நாம் கழிக்கிறோம். 30 கழித்தல் 25 என்பது 5 ஆகும். அதாவது, கடன் வாங்குதல் அல்லது மறு குழுவமைத்தல் ஆகிய அனைத்தையும் நாம் செய்ய முடியும். இது 10 என ஆகின்றது. இது 2 என ஆகின்றது. 10 கழித்தல் 5 என்பது 5 ஆகும். 2 கழித்தல் 2 என்பது பூஜ்யம் ஆகும். ஆனால் எப்படியோ, 30 கழித்தல் 25 என்பது 5 ஆகும் இப்பொழுது இந்த 7ஐ நாம் கீழே கொண்டுவர முடியும். 57-ல் 25 இரண்டு முறை செல்கின்றது, சரியா? 2 முறை 25 என்பது 50 ஆகும். 57-ல் 25 இரண்டு முறை செல்கின்றது. 2 முறை 25 என்பது 50 ஆகும். இப்பொழுது நாம் மீண்டும் கழிக்கிறோம். 57 கழித்தல் 50 என்பது 7 ஆகும். இப்பொழுது நாம் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். - இந்த 5 ஐ நாம் அங்கே கீழே கொண்டுவருகிறோம். 75-ல் 25 மூன்று முறை செல்கின்றது. 3 முறை 25 என்பது 75 ஆகும். 3 முறை 5 என்பது 15 ஆகும். 1-ஐ அடுத்த தொகுதியில் சேர்க்கவும். நாம் அதை நிராகரித்து விடலாம். அது முன்பு இருந்ததிலிருந்து வந்தது. 3 முறை 2 என்பது 6, கூட்டல் 1 என்பது 7 ஆகும். நீங்கள் அதைப் பார்க்க முடியும். பின்பு நாம் கழிக்கிறோம், நமக்கு மீதம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, 103.075-ல் 25 மிகச் சரியாக 4.123 முறை செல்கின்றது, இது சரியானது, ஏனெனில் 100 -ல் 25 நான்கு முறை செல்கிறது. இது 100 ஐ விட சற்று பெரியதாகும், எனவே அது நான்கு முறையை விட சற்று அதிகமாகச் செல்கின்றது. மேலும், இது சரியாக 0.25 எத்தனை முறை 1.03075-ல் செல்லும் என்பதாகும். இதுவும் 4.123 ஆகும். எனவே இந்த பின்னம், அல்லது இந்தக் வெளிப்பாடு, 4.123 என்பதற்குச் சமமானதாக இருக்கும். நாம் முடித்துவிட்டோம்! -