இவ்விரண்டு கலப்பு எண்களையும் கூட்டி எளிதாக்குக.
நம்மிடம் இரண்டு கலப்பு எண்கள் உள்ளது.
நம்மிடம் ஒரு முழு எண், மற்றும் ஒரு பின்னம் உள்ளது
இதை கூட்ட வேண்டும்.
இதற்கு இரண்டு வழிகள் உள்ளது.
கலப்பு எண்ணை ஒழுங்கற்ற பின்னமாக மாற்றி
பின் அதை கூட்டலாம்.
கூட்டி வரும் ஒழுங்கற்ற பின்னத்தை பின்பு கலப்பு எண்ணாக மாற்ற வேண்டும்.
இதை இன்னொரு வகையில் செய்யலாம்.
17 2/9 என்பது 17 + 2/9 ஆகும்.
பிறகு, 5 1/9 என்பது 5 + 1/9 ஆகும்.
17. 2/9 + 5. 1/9 = 17 + 2/9 + 5 + 1/9.
= 17 + 5 + 2/9 + 1/9 ஆகும்.
இவை இரண்டும் ஒன்று தான்,
நாம் சில எண்களை கூட்டுகிறோம்,
எந்த வரிசையில் கூட்டுகிறோம் என்பது
முக்கியமில்லை, பிறகு நாம் மாற்றிக் கொள்ளலாம்.
இதுவும் 17 கூட்டல் 5
கூட்டல் 2/9 கூட்டல் 1/9 என்பதும் ஒன்று தான்.
இதை எந்த வரிசையில் வேண்டுமானாலும் செய்யலாம்.
17 + 5 என்றால் என்ன என்று நமக்கு தெரியும்.
இதற்கு முன்னர் செய்திருக்கிறோம்.
17 + 5 = 22,
22 + 2/9 + 2/9 என்றால் என்ன?
இப்பொழுது நமது பகுதிகள் ஒன்றாக உள்ளது,
எனவே இதன் தொகுதிகளை கூட்டலாம்.
1/9 + 2/9 = 3/9
எனவே, இப்பொழுது 22+3/9, இதை எளிதாக்கலாம்.
இதன் பகுதி மற்றும் தொகுதி இரண்டும்
3 ஆல் வகுபடும்.
தொகுதி எண்ணை 3 ஆல் வகுத்தால், 1 கிடைக்கும்.
பகுதி எண்ணை 3 ஆல் வகுத்தால், 3 கிடைக்கும்.
எனவே 22+1/3 என்பது
22+1/3 என்பது 22 1/3 ஆகும்.