15, 6 மற்றும் 10 ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கு, அதாவது மீ.பொ.ம., என்ன? மீ.பொ.ம. என்பது அந்த வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்றே, இந்த எண்களின் மீச்சிறு பொது மடங்கு ஆகும். இதைப் பற்றி இந்தக் கணக்கில் தெரிந்துகொள்வோம். அதைச் செய்வதற்கு, 15, 6 மற்றும் 10 ஆகியவற்றின் பல்வேறு மடங்குகளை நாம் கருத்தில் கொள்வோம். பிறகு அந்த எண்களுக்கு பொதுவாக உள்ள மிகச்சிறிய மடங்கை கண்டுபிடிக்கவும். எனவே, 15 -ன் பெருக்குகளை கண்டுபிடிப்போம். 1x15 =15, 2x15=30, பின்பு நீங்கள் மீண்டும் 15ஐக் கூட்டினால் 45 கிடைக்கும், மீண்டும் 15ஐக் கூட்டினால் 60 கிடைக்கும், மீண்டும் 15ஐக் கூட்டினால், 75 கிடைக்கும், மீண்டும் 15ஐக் கூட்டினால் 90 கிடைக்கும், மீண்டும் 15ஐக் கூட்டினால் 105 கிடைக்கும். இங்கே உள்ள காரணிகளுக்குப் பொதுவாக இவற்றில் ஏதும் இல்லையெனில், நீங்கள் மேலும் தொடர வேண்டியிருக்கலாம், ஆனால் இப்பொழுது நான் இங்கே நிறுத்திவிடுகிறேன். இதுவரை நாம் 15-ன் மடங்குகளை 105 வரை கண்டுபிடித்துள்ளோம். இப்பொழுது நாம் 6-ன் மடங்குகளைக் கண்டுபிடிப்போம். 6-ன் மடங்குகள்: 1x6=6, 2x6=12, 3x6=18, 4x6=24, 5x6=30, 6x6=36, 7x6=42, 8x6=48, 9x6=54, 10x6=60. 60 என்பது போதுமானதாக இருக்கின்றது, ஏனெனில் அது 15 மற்றும் 60-ன் பொதுவான மடங்கு. இவற்றில் இரண்டு நம்மிடம் இருக்கிறது. நம்மிடம் ஒரு 30 மற்றும் ஒரு 30, ஒரு 60 மற்றும் ஒரு 60 இருக்கிறது. எனவே, மீச்சிறு மீ.பொ.ம... ...எனவே 15 மற்றும் 6-ன் பொதுவான மடங்கினை மட்டும் கருத்தில் எடுத்துக்கொண்டால். நாம் அது 30 எனக் கூறலாம். அதை ஒரு இடைப்பட்ட எண்ணாக எழுதுவோம் 15 மற்றும் 6-ன் மீ.பொ.ம. இதில் பொதுவாக இருக்கக்கூடிய மிகச் சிறிய மடங்கு ஆகும். 15x2=30, மற்றும் 6x5=30. எனவே, நிச்சயமாக இது ஒரு பொது மடங்கு ஆகும். மேலும், இது அனைத்து மீ.பொ.ம.-க்களிலும் மிகச் சிறியதாகும். 60-ம் பொது மடங்கு தான், ஆனால் அது பெரியது. எனவே, 30 மீச்சிறு பொது மடங்கு ஆகும். நாம் இன்னும் 10 ஐக் கருத்தில் கொள்ளவில்லை. எனவே, 10 ஐ உள்ளே கொண்டு வரலாம். 10-ன் மடங்குகளை கண்டுபிடிப்போம். அவை 10, 20, 30, 40... இது போதுமானது. ஏனெனில், நாம் ஏற்கனவே 30 ஐ பெற்றுவிட்டோம், 30 என்பது 15 மற்றும் 6-ன் பொது மடங்கு. மேலும், இவை அனைத்திலும் இது மிகச்சிறிய பொது மடங்கு ஆகும். உண்மையில், 15, 6 மற்றும் 10 ஆகியவற்றின் மீ.பொ.ம. 30-ற்கு சமம். மீச்சிறு பொது மடங்கை கண்டுபிடிக்க இது ஒரு வழி. ஒவ்வொரு எண்ணின் மடங்குகளையும் கண்டுபிடித்து பின்பு, அவற்றில் பொதுவாக உள்ள மிகச்சிறிய மடங்கு எது எனப் பார்க்கவும். இதைற்கு மற்றொரு வழி, இந்த எண்களின் பகாக் காரணிகளைக் கண்டறிவது. மேலும் மீ.பொ.ம. என்பது, இந்த பகாக் காரணிகளின் அனைத்து எண்களையும் கொண்டிருக்கும். நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன். எனவே, நீங்கள் இந்த வழியில் செய்யலாம், அல்லது 15 என்பது 3x5 சமமாகும், அவ்வளவுதான். இதுதான் அதன் பகாக்காரணிகள், 15 என்பது 3x5, ஏனெனில் 3 மற்றும் 5 இரண்டுமே பகா எண்கள். 6 என்பதை 2 பெருக்கல் 3 எனக் கூறலாம். இது அதன் பகாக் காரணிகளாகும், ஏனெனில் 2 மற்றும் 3 இரண்டுமே பகா எண்கள் தான். பின்பு, 10 என்பது 2x5 எனக் கூறலாம். 2 மற்றும் 5 இரண்டு எண்களுமே பகா எண்கள் தான். எனவே, 15, 6 மற்றும் 10 ஆகியவற்றின் மீ.பொ.ம., இந்த அனைத்து பகாக் காரணிகளையும் பெற்றிருக்க வேண்டும். அதாவது, 15 ஆல் வகுபட வேண்டுமென்றால் அந்த எண் தன்னுடைய பகாக் காரணிகளில் குறைந்தபட்சம் ஒரு 3 மற்றும் ஒரு 5-ஐ பெற்றிருக்க வேண்டும். அதன் பகாக் காரணியில் 3x5-ஐ பெற்றிருந்தால், அந்த எண் 15ஆல் வகுபடும் என்பதை இது உறுதிப்படுத்துகின்றது. 6 ஆல் வகுபடுவதற்கு, அதில் குறைந்தபட்சம் ஒரு 2 மற்றும் ஒரு 3 இருக்க வேண்டும். நம்மிடம் இங்கு ஏற்கனவே 3 உள்ளது, அவ்வளவுதான் நமக்குத் தேவை. நமக்கு ஒரு 3 மட்டுமே தேவை. எனவே ஒரு 2 மற்றும் ஒரு 3. அதாவது 2x3 இது நாம் 6 ஆல் வகுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. இங்கே இருப்பது 15. 10 ஆல் வகுக்க வேண்டுமென்றால், நமக்கு குறைந்தபட்சம் ஒரு 2 மற்றும் ஒரு 5 தேவை. இங்கேயுள்ள இந்த இரண்டும், நாம் 10 ஆல் வகுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த 2x3x5 அனைத்தும் 10,6 or 15 -ன் பகாக்காரணிகள். எனவே, இது மீ.பொ.ம ஆகும். இவை அனைத்தையும் பெருக்கினால், 2x3=6, 6x5=30 கிடைக்கும் இரண்டு வழிகளிம் ஏன் பொருளுடையனவாக இருக்கின்றன என நீங்கள் காண்கிறீர்கள். இரண்டாவது வழி சற்று சுலபமானது. இதை சிக்கலான எண்களை... பெருக்குவதற்கு உபயோகிக்கலாம். ஏனெனில், அவை நேரம் எடுத்துக்கொள்ளும். இந்த இரண்டு வழியிலும், மீச்சிறு பொது மடங்கை கண்டுபிடிக்கலாம்.